பிரபல பாடகர் S.P. பாலசுப்ரமணியத்தின் 50 வருட இசைப்பயணப் பூர்த்தியினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை (12) கொழும்பு CRNC மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர்களான S.P. பாலசுப்ரமணியம், சைலஜா, மதுபால கிருஷ்ணன், S.P.B. சரண் மற்றும் சாதனா சர்கம் ஆகியோர் இன்று நாட்டை வந்தடைந்தனர்.

