முதிரை மற்றும் தேக்கு மரங்களுடன் ஒருவர் கைது



மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி பகுதியில் இன்று (28) அதிகாலை பத்து ம முதிரை மற்றும் தேக்கு மரங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பத்தில் கைது செய்யப்பட்ட சந்தே நபர் வாகன சாரதி என பொலிஸார் கூறியுள்ளனர்.
அக்குரானை காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.