காலி கலந்துரையாடல் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்



காலி கலந்துரையாடல் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமானது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை என்பன இணைந்து 7 ஆவது தடவையாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
”மூலோபாய கடல்சார் இணைப்புகளை மேம்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறுவதுடன், இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டிருந்தார்.
42 நாடுகளின் பிரதிநிதிகளும் 12 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கையைச் சுற்றி பெறுமதியான வளங்கள் காணப்படுவதாகவும் அதனை அனைத்து இன மக்களின் தேவை கருதி பயன்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.