ஏழைகளுக்கு நீங்கள் உதவுங்கள்! - நடிகர் விஜய்க்கு பி.ஜே.பி பதிலடி



நோக்கம் பெரியதாக இருக்கும்போது பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், நோக்கத்தை விட பாதிப்பு அதிகமாக இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. 20 சதவிகித மக்கள் செய்யும் தவறுக்கு 80 சதவிகித மக்கள் பாதிக்கப்படுவது வேதனையாக இருக்கிறது’’ என்று நவம்பர் 15-ம் தேதி நடிகர் விஜய் பேட்டி அளித்தார். அதை தமிழக காங்கிரஸ் வரவேற்றுள்ளது. 

பி.ஜே.பி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், ‘‘ஏழை, எளிய மக்கள் என்றுமே ஏழைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் இந்த நாட்டின் கவுரவம் மிக்க குடிமக்கள். அவர்களும் மற்றவர்களைப்போல இந்த நாட்டின் அனைத்து சவுகரியங்களையும் பயன்படுத்த உரிமை  இருக்கிறது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக ஏழை மக்களை, ஏழைகளாகவே வைத்துவிட்டார்கள். ஏழைகளின் வேதனை இனி துடைத்தெறியப்படும். அதற்காகத்தான் ‘ஜன்தன் வங்கி கணக்கு’, ‘மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துதல்’ என்று பல்வேறு திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார்.பி கடுமையாகக் கண்டித்துள்ளது.  விஜய், பொதுவெளியில் வந்து ஏழை மக்களுக்கு உதவ அழைப்பு விடுத்துள்ளது தமிழக பிஜேபி.‘பெயர்த்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார்... அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மருத்துவச் செலவுக்கு பணம் இல்லையே என்று இப்போது அல்ல; முன்பும் இறந்து போயிருக்கிறார்கள். ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது போக மீதியை இந்த ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டால் ஏழை மக்களின் வேதனை, துயரம் போக்க உதவிகரமாக இருக்கும். 

றிக்கை விடுவதை விட்டு விட்டு, பொதுவெளியில் வந்து ஏழை எளிய மக்களின்  கண்ணீர் துடைக்க உதவுங்கள். நாட்டு மக்களின் பிரச்னைகளை சரி செய்ய மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கறுப்புப் பணத்தை ஒழிப்பற்கு மோடி எடுத்துள்ள நடவடிக்கையை நாட்டு மக்கள் மனதாரப் பாராட்டுகிறார்கள். கறுப்புப் பணம் வைத்துள்ளோருக்கு கிலி ஏற்பட்டுள்ளது’’ என்று பதில் சொன்னார்.