கணவரின் சடலத்தை கோரி, நீதிமன்றத்தை நாடிய மூன்று மனைவிமார்



வாகன விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி, திருமணம் முடித்த மூன்று மனைவிமார், திருமண பதிவு சான்றிதழுடன் கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர்.
தனது கணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மூன்று மனைவிமாரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
யக்கல – கிரிந்திவெல வீதியில் கடந்த 13ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 44 வயதான ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்த சடலத்தை பொறுப்பேற்பதற்காக மூன்று பெண்கள் முன்வந்ததை அடுத்து, இந்த விடயம் குறித்து தீர்மானத்தை பெற்றுக் கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த நபரின் மூன்று மனைவிமாருக்கும் 6 பிள்ளைகள் இருக்கின்றமை விசாரணைகளின் ஊடாக உறுதியாகியுள்ளது.
1996ஆம் ஆண்டு முதல் ஒருவருக்கு ஒருவரை தெரியாத வண்ணம் இரகசியமான முறையில் இவர் குறித்த மூன்று பெண்களுடனும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மனைவிமாரின் கோரிக்கைக்கு அமைய இந்த சம்பவம் தொடர்பான தீர்ப்பை நீதவான் நாளைய தினம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.