அண்மையில் காலமான இலங்கையின் பிரபல பாடகர் பண்டித் டப்ளியூ.டீ.அமரதேவவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளன.
இதன் பொருட்டு கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் விஷேட வாகனப் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அன்னாரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு, இன்று கொழும்பு மாநகர சபைக்கு உட்பட் பகுதிகளிலுள்ள அனைத்து, மதுபானசாலைகள், திரை அரங்குகள், மற்றும் அனைத்து வகையான இறைச்சி கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பூரண அரச மரியாதையுடன் பாடகர் பண்டித் டப்ளியூ.டீ.அமரதேவவின் இறுதிக் கிரியைகள் மாலை, கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெறவுள்ளதாக, அமைச்சர் வஜீர அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

