வர்தா புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும் 3 வீடுகளை கடல் உள்வாங்கிக் கொண்டது.
வர்தா புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் கடற்கரை பகுதியில் நேற்று முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் இன்று காலை முதல் கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும் பொம்மையார்பாளையத்தில் 3 வீடுகளை கடல் அலை இழுத்துச் சென்றது. இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் மீட்டு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், பொது மக்கள் புதுச்சேரி கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரையோரத்தில் இருக்கும் மக்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.