இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 04 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 03 பேரும் உட்பட கிழக்கு மாகாணத்தில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது.
இதில் அம்பாறை பொத்துவில் தேர்தல் தொகுதியில் 17 பேர் போட்டியிட்ட நிலையில் காரைதீவைச் சேர்ந்த லோகராஜ் சுலக்சன் 1,256 வாக்குகளையும் கல்முனைத் தொகுதியில் 08 பேர் போட்டியிட்ட நிலையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த எப்.எம்.டில்சாத் 743 வாக்குகளையும் சம்மாந்துறைத்; தொகுதியில் 09 பேர் போட்டியிட்ட நிலையில் அக்கரைப்பற்றைச் ஏ.கே.நிப்ராஸ் 742 வாக்குகளையும் அம்பாறைத் தொகுதியில் 34 பேர் போட்டியிட்ட நிலையில் உகணவைச் சேர்ந்த திலால் துவிந்த 639 வாக்குகளையும் பெற்று 4 பேர் தெரிவு செய்யப்பட்னர் அதேவேளை மேலதிகமாக ஒரு போனஸ் ஆசனம் கிடைக்கவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.ஜி. தாரிக்கா தமயந்தி தெரிவித்தார்.
அதேவேளை மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில் 20 போட்டியிட்ட நிலையில்; கரடியனாற்றைச்; சேர்ந்த மனோகரன் சுரேஸ்காந்தன் 3264 வாக்குகளையும் மட்டக்களப்புத் தொகுதியில் 14 போட்டியிட்ட நிலையில் வவுணதீவு கொத்தியாபுவைச் சேர்ந்த அருள்நாயகம் தக்ஸிக்கா 1862 வாக்குகளையும் பட்டிருப்புத் தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில் மகிழுர்முனையைச் சேர்ந்த குணரெட்னம் துசாந்தன் 1223 வாக்குகளையும் பெற்று 3 பேர் nதிவு செய்யப்பட்டனர் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
திருகோணமலை சேரவிலத் தொகுதியில் 12 பேர் போட்டியிட்ட நிலையில் பதவிசிறிபுரவைச் சேர்ந்த அகில பிரபாத் வீரசூரிய 655 வாக்குகளையும் மூதூர் தொகுதியில் 07 பேர் போட்டியிட்ட நிலையில், மூதூரைச் சேர்ந்த அப்துல் காதர் நபிகான் 533 வாக்குகளையும் திருகோணமலைத் தொகுதியில் 06 பேர் போட்டியிட்ட நிலையில், திருகோணமலை நகரைச் சேர்ந்த ஐயமுத்து டிலுக்ஷன் 280 வாக்குகளையும் பெற்று 3 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட அதிகாரி சி.ரவிக்குமார் தெரிவித்தார்.

