விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், விமானம் மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து, ரத்மலானை விமானப்படை முகாமிற்கு இன்று கொண்டுவரப்பட்டன.
விபத்தில் உயிரிழந்த 25 வயதான, லஹிருவுடன், இந்த பயணத்தில் அவரின் குடும்பத்தினரும் இணைந்துகொள்ளவிருந்தனர்.
எனினும், லஹிருவின் குடும்பத்தினர் சென்றிருக்கவில்லை.
களுத்துறை, ஹல்தொட கஜூகஸ்வத்த பகுதியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு சென்றவர்களை ஏற்றிய வேன், நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஏழு பேர் மற்றும் அவர்களது உறவினர்கள் இருவரும் இந்த விபத்தில்உயிரிழந்துள்ளனர்.
55 வயதான டபிள்யூ.ஏ தயாவதி, 53 வயதான டபிள்யூ.ஏ லீலாவதி, 67 வயதான டபிள்யூ.ஏ சந்திராவதி, டபிள்யூ.ஏ தயாரத்ன, டபிள்யூ.ஏ அமல் குணரத்ன, டபிள்யூ.ஏ குணசேன, டபிள்யூ.ஏ நந்தாவதி, 68 வயதான, யகுபிடியகே சுமனாவதி, 54 வயதாக யகுபிடியகே உபுல் வசந்த குமார மற்றும் 25 வயதான லஹிரு மதுசங்க ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மற்றையவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் நாளை பிற்பகல் ஹல்தொட்ட கஜூகஸ்வத்த பகுதியிலுள்ள அவர்களின் குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளன.

