தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைகள் பலனின்றி நேற்று (05) இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுள்ளார்.
புதிய முதல்வராக பன்னீர்செல்வத்துக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 15 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதற்கான நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதன்போது ஜெயலலிதாவின் மறைவிற்கு 2 நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்க உள்ளார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்பட்ட ஓ. பன்னீர் செல்வம், இதற்கு முன்பு இரண்டு முறை இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது