இரும்பு மனுஷியை இழந்தது தமிழகம்.இறுதிக் யாத்திரை இன்று



நேற்று இரவு மரணித்த தமிழக முதல்வரது இறுதிக் கிரியைகள் இன்று இடம் பெறும். தமிழகத்தில் துக்க தினம் அனுஸ்டிக்கப் படுகின்றது. 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை. தற்போது இவரது உடலம் ராஜாஜி மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. தவைர்கள் தமது இறுதி அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.


தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்!  தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். 
அவர்களின் துக்கத்தில்  #சிலோன்24 உம் பங்கெடுக்கின்றான்.