பொலிஸ்மா அதிபர் பதிலளித்த விதம் தவறு - விசாரிக்க முடிவு ( வீடியோ)



நேற்று இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் தொலைபேசி அழைப்பு ஒன்றுக்கு பதிலளித்த விதம் தவறானது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  


பொலிஸ் மா அதிபர் பதிலளித்த விதத்தை தான் ஊடகங்கள் மூலம் பார்த்ததாகவும், இது குறித்து விடயங்களை ஆராயவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். 

இன்று பாராளுமன்றத்தில் விமலவீர திஸாநாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

நேற்றையதினம் இரத்தினபுரி பகுதியில், இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட ​பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு, ஒரு அவசர தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. 

குறித்த அழைப்பின் போது, பொலிஸ் மா அதிபர், “நிச்சயமாக நான் கூறுகின்றேன் சேர், நிதி மோசடி விசாரணை பிரிவினால் அவர் கைதுசெய்யப்படவில்லை" எனக் குறிப்பிட்டார். 

இது குறித்த காணொளி வௌியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.