தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் போது நால்வர் உயிரிழப்பு – விசாரணை ஆரம்பம்



தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட 6 சத்திரசிகிச்சைகளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, Non Ionic contrast media for cardio angiography for adult – 100ml என்ற டை யை தற்காலிகமாக தடை செய்ய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்
இதனைத் தொடர்ந்து இருதய சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் இந்த டை குறித்து அரச ஓளடத அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த டையை கொழும்பு வடக்கு, தேசிய வைத்தியசாலை, மொணராகலை, யாழ்ப்பாணம், கராபிட்டி, கொழும்பு தெற்கு, பதுளை, குருநாகல், களுத்துரை மற்றும் பேராதனை ஆகிய வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த டை ரகத்தை பயன்படுத்துவதனை உடனடியாக நிறுத்துமாறு வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது,
ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்த டை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவரடங்கி குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது