ஊதியத்தை அதிகரிக்குமாறு கோரி பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
நாளை காலை 6 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் சங்கத் தலைவர் A.W. பிரேமலால் தெரிவித்தார்.
ஏற்கனவே ஊதியத்தை அதிகரித்துத் தருமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 6 மணி வரை தொடரும் என குறிப்பிட்ட சங்கத் தலைவர், இந்த காலப்பகுதிக்குள் நேரிடும் விபத்துக்களுக்கு தாம் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் கூறினார்.
இதேவேளை, பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுமாறு ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் ரயில் சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.