அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக வருடாந்த இறுதி நிகழ்வு



Suhaib Umarlebbe

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் வருடாந்த இறுதி நிகழ்வுகள் 2016.12.31 ஆந் திகதி முற்பகல் 11.30 மணியளவில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரான ஜனாப்.A.L.M.காசிம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி பகற்போசனத்துடன் பிற்பகல் 3.00 மணியளவில் நிறைவடைந்தது.

அந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர், ஆசிரிய ஆலோசகர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், ஊழியர்களுமாகப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

அதன் போது 2016 ஆம் ஆண்டின் போது செய்து முடிக்க வேண்டிய வேலைகள், அவைகளில் செய்து முடிக்கப்பட்டவை பற்றியும், 2017 ஆண்டு செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும் மிகவும் விரிவான முறையில் ஒவ்வொரு பிரிவுகளின் தலைர்களும் மிகவும் ஆணித்தரமான முறையில் எடுத்துரைத்தனர்.

2016 ஆண்டு நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் சாதனை படைத்த சாதனையாளர்களையும், அவற்றுக்கான பாடசாலைகளையும் பாராட்டிப் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.