சர்வதேச ஒருங்கிணைப்பாளராக சுகாதாரத் துறையில் நியமிக்கப்படும் முதல் நபராக டாக்டர் பாலித மஹிபால



தெற்காசிய வலய நாடுகளுக்கான தொற்றா நோய் சுற்றுச்சூழல் மற்றும் இடம்பெயர்வு சுகாதார சர்வதேச ஒருங்கிணைப்பாளராக டாக்டர் பாலித மஹிபால நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலை நகரிலுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்காசிய வலயத்திற்கான அலுவலகத்தில் வைத்து அவர் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதற்கிணங்க குறித்த வலயத்திலுள்ள 11 நாடுகளின் பிரதானியாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பாலித மஹிபால பணியாற்றவுள்ளார்.சுகாதாரத் துறையில் இவ்வாறான ஒரு பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது நபராக டாக்டர் பாலித மஹிபால கருதப்படுகிறார்
மேலும் 2011 ஆம் ஆண்டு சுகாதார பணிப்பாளராக நியமிக்கப்பட்ட மருத்துவர் பாலித மஹிபால சுகாதார சேவையில் 30 ஆண்டு கால அனுபவம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.