கல்வி அமைச்சர் பதவியை கோரிய பந்துல



நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வியமைச்சர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரியுள்ளதாகவும், இதை அவரே தன்னிடம் கூறியதாகவும் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இந்திக கோரளகே தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும், ஹோமாகம தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் தன்னுடன் நடந்த சந்திப்பில் அவர் இதனை கூறியதாகவும் இந்திக கோரளகே குறிப்பிட்டுள்ளார்.

பந்துல குணவர்தனவுக்கு கல்வியமைச்சர் பதவி கிடைத்திருந்தால், அவரும் தற்போதை அரசாங்கத்தில் அமைச்சராக இருந்திருப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்திக்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

அத்துடன், பந்துல குணவர்தனவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத காரணத்தினால், அவர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார், எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.