நினைவு தினம்



கியூபாவின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற ஃபிடல் கெஸ்ட்ரோவை நினைவுகூரும் வகையில், விசேட நிகழ்வொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.
மாபெரும் புரட்சியாளரான ஃபிடல் கெஸ்ட்ரோவிற்கு கௌரவமளிக்கும் வகையில், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.