நாடு தழுவிய ரீதியில் தனியார் பஸ் வண்டி சாரதிகள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அலுவலக ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தமது கடமைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் இன்று பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
எனினும் இவ்வாறான நெருக்கடியான நிலையிலும், சாதகமானதொரு தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பு நகரின் பல்வேறு வீதிகளில் பயணித்த சாரதிகள் வீதி ஒழுங்குகளை முழுமையாக கடைப்பிடித்ததாக போக்குவரத்து பொலிஸ் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களில் பின்னர் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்துக்கு சொந்தமான பஸ் வண்டிகளை விடவும் தனியாருக்கு சொந்தமான பஸ்களே அதிகம் காணப்படுகின்றன.
தனியார் பஸ்கள் அனைத்தும் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதன் காரணமாக இவ்வாறு வீதி ஒழுங்குகள் கடைப்பிடிப்பதற்கு வாய்ப்பாக அமைந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

