பொலன்னறுவை புதிய நகர் பகுதியில் பிரதி பொலிஸ் மா அதிபரின் வாகன சாரதியாக சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் மதிரிகிரிய குசும்பொகுண பகுதியில் வசித்துவரும் 49 வயதான ஒருவராவார்.
இவர் பொலன்னறுவை புதிய நகர் பகுதியில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் சேவையாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையின் பின்னர் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியாமற்போனது.
எவ்வாறாயினும், மின்னேரிய ஆலய பஸ்நாயக்க நிலமேயின் தகவலுக்கமைய இன்று நண்பகல் மின்னேரிய வாவிக்கு அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.

