கோப் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சில தவறான கருத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சுனில் ஹந்துன்நெத்தியின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறிகள் கொடுக்கல் வாங்கல் மற்றும் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பான கண்காணிப்பு, பரிந்துரைகள் போன்ற விடங்கள் குறித்த கோப் அறிக்கையில் அடங்கியுள்ளதால், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது பற்றிய கருத்துக்களை கடந்த நவம்பர் 9ம் திகதி சட்டமா அதிபரிடம் கோரினார்.
மேலும் சட்டமா அதிபருக்கு குறித்த அறிக்கையை அனுப்புவதாக சபாநாயகருக்கு வாய்மொழி மூலம் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் சட்ட மாஅதிபர் கோரும் ஏனைய ஆவணங்களை சபாநாயகரின் அனுமதியுடன் வழங்குமாறு நவம்பர் 9ம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் பிரதமர் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளதுடன், விவாதத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பிரதமரால் சபாநாயகரின் அதிகாரம் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடாத சுனில் கந்துன்நெத்தி தற்போது அவ்வாறானதொரு கருத்தை கூற முற்படுகின்றார்.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால், கோப் குழுவின் அறிக்கை சட்ட மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவது, சட்டபூர்வமானது.
தனது நிர்வாகத்தின் கீழ் சேவையாற்றும் ஊழியர் ஒருவர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மாஅதிபரின் நிலைப்பாட்டை வினவுவது, சாதாரண விடயம்.
இதன்மூலம் பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை.
கோப் குழுவின் தலைவர் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது, அவரது குழுவின் செயலாளரினால் கோப் அறிக்கை, கடந்த 8ம் திகதி சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் பின்னரே எனவும், பிரதமர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது