வீ்ட்டுக்கூரை உயிரைக் காவியது




மட்டக்களப்பு கல்குடாவில் தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் கூரை வேலை செய்து கொண்டிருந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கால் தவறி நிலத்தில் விழுந்ததினால் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். 

இச்சம்வம் நேற்று செவ்வாய் கிழமையன்று பிற்பகல் வேளை இடம்பெற்றுள்ளது. 

வாழைச்சேனை மீறாவோடை தமிழ் பிரிவு வாழைச்சேனையைச் சேர்ந்த ந.நவசுமன் (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். 

தச்சு வேலை செய்யும் சக தொழிலாளர்களுடன் மேற்படி கட்டடத்தின் மேலேறி மரத்தினைக் கொண்டு கூரை செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்த போதே கால் தவறி நிலத்தில் விழுந்ததுள்ளார். 

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணைகளின் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.