யாழில் நீரில் மூழ்கி சிறுவன் உட்பட இருவர் பலி



யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நீராடச் சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

கீரிமலை - மாதகல் - 5, கண் கடற்கரையில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் நீரில் மூழ்கி பலியானார். 

யாழ். - இளவாலை பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியரான நகுலன் (வயது - 31) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கியவர் எனத் தெரியவந்துள்ளது. 

இதேவேளை யாழ்ப்பாணம் - கந்தரோடைப் பகுதியில் உள்ள பினாக்காய் குளத்தில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அளவெட்டி - அலுக்கை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சாருஜன் (வயது 9) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

இவரது சடலத்தை மீட்ட பொலிஸார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைத்த நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.