அம்பாறை - பிபில வீதியின் நாமல்ஓய மற்றும் முல்கேமவுக்கு இடையிலான வனப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு ஐவர் காயமடைந்துள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை மீறிய காரொன்று வீதியைவிட்டு விலகி மரத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது காரைச் செலுத்திச் சென்றவர், அவரது தாய், மூன்று பிள்ளைகள் மற்றும் நண்பர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் காரை செலுத்திச் சென்றவரின் தாய் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் பேராதனை - அகுனாவெல பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவராகும்