மூன்று உயிர்கள் பலி.



அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வாகனம் ஒன்று அதற்கு எதிர்திசையில் சென்ற கொள்கலனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

ஏ9 பிரதான வீதி, இரட்டை பெரியகுளம் பகுதிக்கு அருகே இன்று அதிகாலை 5.30 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை சம்பவத்தில் பலியானவர்கள் தெஹிவளை பகுதியை சேர்ந்தவர்களாகும்.