அக்கரைப்பற்று காமினி மதுபானசாலை அருகே வாள்வெட்டு



அட்டாளைச்சேனையை சேர்ந்த அப்துல்லாஹ் 40 வயது என்பவருக்கு அக்கரைப்பற்று  40 ம் கட்டையை சேர்ந்த அரியநாயம் அரியதாஸ் என்பரினால் வாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம்  (10.12.2016 ) மாலை அக்கரைப்பற்று  காமினி மதுபானசாலை அருகே இடம்பெற்றுள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்கத்தால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரனையை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொள்கின்றனர்.