கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார பீடத்திற்கு புதிய பீடாதிபதியாக தெரிவாகியுள்ள முனியாண்டி ரவி கடமையைப் பெறுப்பேற்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் மெய்யீயல் துறை பட்டதாரியான முனியாண்டி ரவி கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான கற்கைகள் துறைக்கான தலைவர், கல்வி பிள்ளை நலத்துறை பதில் தலைவர், அறபுத் துறை பதில் தலைவர், சிரேஸ்ட மாணவ ஆலோசகர், விளையாட்டு ஆலோசகர் சபையின் பணிப்பாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
பல்கலைக்கழக பீடங்களுக்குரிய பீடாதிபதிகளுக்குரிய பதவிக் காலம் மூன்று வருடங்களாகும்.
இந்தநிலையில், இதுவரை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை, கலாசார பீடத்திற்குரிய பீடாதிபதியாக கலாநிதி கந்தையா ராஜேந்திரம் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

