(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
அக்கரைப்பற்று, 02ம் குறிச்சியினைச் சேர்ந்த அபுசஹித் விதானை இன்று தனது 80 ஆவது வயதில் இயற்கை எய்தினார். உதைபந்தாட்ட வீராக இவர் மிளிர ஏஸ் கழகம் அன்று இவருக்கு களமமைத்தது.
கிராம சேவையாளர்கள் அபுர்வமாகவும், தொழில்சார் தகமையுள்ளவர்களாவும், காணப்பட்டால் மாத்திரம் நியமனம் வழங்கும் காலத்தில் தெரிவு செய்யப்பட்டவர் இவர். ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசும் திறன் கொண்டவராகத் திகழ்ந்தார்.
அக்கரைப்பற்று, மூத்த போடியார் குடும்பத்தின் மூத்த மருமகனான இவர், 4 பிள்னைகளின் தந்தையாவார்.
ஜனசா நல்லடக்கம் இன்று மாலை அக்கரைப்பற்றில் இடம் பெற்றது. இறைவன் இவரையும் நல்லடியார்கள. கூட்டத்தில் சேர்த்து வைக்க எமது பிரார்த்தனைகள்!

