சில இளம் பிக்குகளின் நடவடிக்கை கவலைக்குரியது



நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் இலங்கை முகம்கொடுத்துள்ள சவால்களை வெற்றி கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் அரசியலமைப்புடன் சமூக நீதியை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற சமூக நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அத்துடன், சில இளம் பிக்குகளின் நடத்தைகளை பார்க்கையில், பௌத்தர்கள் என்ற வகையில் மிகவும் கவலையடைவதாகவும், ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.