கல்லடி பாலத்தில் குதித்து பொலிஸ் அதிகாரி தற்கொலை



மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து குதித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் தெரிவிக்கின்றனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த திருபாலசிங்கம் சிவதாசன் (வயது 47) எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சுகயீனம் காரணமாக, கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 16ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டார். இங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளார். 

நோய்வாய்ப்பட்டு நேற்றைய தினம் வைத்தியசாலையில்  இருந்த நிலையில் இவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்ததாக தெரிவிக்கின்றனர்.


குறித்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சற்றுமுன் பொதுமக்கள் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.