முச்சக்கர வண்டி உரிமையாளர்களால் போக்குவரத்து பாதிப்பு



முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டம் காரணமாக நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில், ரயில் கடவைக்கு அருகில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் பிரகாரம், அப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாலை விதிகளை மீறுவோருக்கு எதிராக அதிகரிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.