அக்கரைப்பற்றில் புலமைப் பரிசில் கௌரவிப்பு






(சுஹைப்)

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் 2015 / 2016 ஆண்டுகளில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 2016.12.12 ஆந் திகதி காலை 10.00 மணிக்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.

அந்நிகழ்வின் விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். A.L.முகம்மது காசிம் அவர்களும், தென் கிழக்குப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதியும், சிரேஷ்ட விரிவுரையாளருமான Dr.A.M.முஸாதிக், பொலிஸ் அத்தியட்சகர் ஜனாப்.M.A.M.நவாஸ் SP அவர்களும், அதிதிகளாக ஜனாப்.M.L.M.லாபீர் - உதவிக் கல்விப் பணிப்பாளர், ஜனாப்.M.A.அபுத்தாஹிர் - உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களும், இன்னும் பல பெற்றோர் பாதுகாவலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அதன் போது தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.