அக்கரைப்பற்றில் பிரதான வீதி ஒழுங்கமைப்பு(one way)சில இடங்களில் மாத்திரம் U turn இல் வாகனங்களைச் செலுத்துவதற்கான ஏற்பாட்டை வீதிப் போக்குவரத்து அதிகார சபையும், பொலிசாரும் இணைந்து வெடிவமைத்துள்னர்.
மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து வரும் போது லங்கா ஸ்ரோர்ஸ் முன்பாக இஸ்மாயில் ஸ்லோர்ஸ் லேனிற்குச் செல்லும் வீதியில் பிரதான வீதயின் குறுக்கே U Turn செலுத்த முடியாது. மீண்டும் ROUNDABOUT சென்று வர வேண்டும்.
பட்டினப் பள்ளிவாயலின் முகப்புத் தோற்றத்துக்கு முன்னுள்ள CEB வீதியிலும் செலுத்த முடியாது. மேலும் MBI shed இன் முன்னுள்ள வீதிக்கு U Turn செலுத்த முடியாது. லாபிரின் கடைக்கு முன்னால் பீச் வீதியிலும் இதே நிலை.
இச் செயற்பாடு வீதி விபத்துக்களைக் தவிர்க்க முடியுமாக இருப்பினும், சில சந்தப்பங்களில், வாகன நெரிசலைக் கொண்டு வருமென விமர்சிக்கவும் படுகின்றது.


