-
அஸ்லம்எஸ்.மௌலானா,ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.எஸ்.எம்.ஹனீபா,கனகராசா சரவணன் -
கல்முனையைச் சேர்ந்த 06 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற 02 இயந்திரப் படகுகள் காணாமல் போயுள்ளது என்று அப்படகுகளின் உரிமையாளர் கல்முனை மற்றும் அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையங்களில் நேற்று (02) முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடிக்காக ஆழ்கடலுக்குச் செல்லும் தனது படகுகள் 05 அல்லது 06 நாட்களில் கரை திரும்புவதே வழக்கமாகும். கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற இப்படகுகள், 10 நாட்களாகியும் இன்னும் கரை திரும்பவில்லை என இப்படகுகளின் உரிமையாளர் கூறினார். இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதுடன், அவர் கடற்படைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இப்படகுகளைத் தேடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். -