ATM மூலம் பணம் திருடியவர் கைது



எ.ரீ.எம். அட்டையின் மூலம் பணத்தை கொள்ளையிட்ட நபர் ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று (26) வியாழகிழமை மாலை 06 மணி அளவில் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். 

கடந்த 13ம் திகதி பொகவந்தலாவ நகர பகுதியில் வைத்து பணப்பை ஒன்றை கொள்ளையிட்டு சென்றவர், கடந்த 13 நாட்களாக தலைமறவாகி இருந்த நிலையில் இன்றையதினம் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்ட பகுதியில் வைத்து கைது செய்யபட்ட தெரிவிக்கப்படுகிறது. 

பணப்பையை களவாடிய நபர் பையில் இருந்த எ.ரீ.எம் அட்டையை பயன்படுத்தி பொகவந்தலாவ பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து ஒரு இலட்சத்து 28,000 ரூபா பணத்தினை களவாடி சென்றுள்ளதாக பொலிஸாரின் அரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 

எ.ரீ.எம் அட்டையின் உரிமையாளர் தனது தந்தைக்கு பொங்கல் தினத்தை முன்னிட்டு மதுபான போத்தல் ஒன்றை பெற்று கொள்வதற்காக பொகவந்தலாவ நகரத்திற்கு வந்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

கைது செய்யபட்ட சந்தேக நபர் 27.01.2017 வெள்ளி கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.