பிறைந்துறைச்சேனை பிரதேசத்தின் முதலாவது சட்டத்தரணி




வை.எம். பைரூஸ்

கல்குடா தேர்தல் தொகுதியில் சற்று பின் தங்கிய பிரதேசமாக காணக்கூடிய பிறைந்துறைச்சேனை தான் சஹாப்தீன் றியாஸ் அவர்களின் சொந்த இடமாகும்.

தனது ஆரம்ப கல்வியை பிறைந்துறைச்சேனை மட் -அஸ்கர் வித்தியாலயத்தில் கற்ற சஹாப்தீன் றியாஸ் அவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை வரை அங்கேயே தனது கல்வியை பின் தொடர்ந்தார். அதன் பிற்பாடு தனது உயர் கல்வியை தொடர்வதற்காக மட்- ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு சென்ற அவர் கலைப் பிரிவில் தனது உயர் கல்வியை பின் தொடர்ந்து 2010 ம் ஆண்டில் தனது உயர் தரப் பரீட்சையை எழுதினார்.

அதில் சிறந்த பெறு பேறுகளை பெற்று கிழக்கு மாகாண வந்தாறுமூலை பல்கலைக் கழகத்துக்கு தேர்வான அவர் அங்கு தனது பட்டப்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலயே தேசிய அரசாங்கத்தினால் நடத்தப்படும் சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சையில் தேர்வு செய்யப்பட்டு கொழும்பிலுள்ள சட்டக் கல்லூரிக்குள் உள்வாங்கப்பட்டார்.
அங்கு தனது சட்டக் கல்வியை பூரணப்படுத்திய றியாஸ் அவர்கள் நேற்றைய தினம் அதாவது 25-01-17 உயர் நீதி மன்ற சட்டத்தரணியாக (Enrolled as an Attorney-at-Law) சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

கல்குடா பிரதேசத்தில் கல்வி வளர்ச்சியில் சற்று பின் தங்கிய பிரதேசமாக காணக்கூடிய பிறைந்துறைச்சேனையில் சஹாப்தீன் றியாஸ் போன்றோரின் விடா முயற்சியுடன் கூடிய வெற்றிகள் ஏனைய மாணவ,மாணவிகளையும் ஊக்கு விக்க கூடும் என எதிர்பார்க்கிறோம்.

அது மட்டு மன்றி தான் ஆரம்ப கல்வி கற்ற தனது சொந்த இடமான பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலயத்திற்கும் உயர் கல்வியை தொடர்ந்த ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கும்,மற்றும் முழு கல்குடா பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்திருக்கும் சஹாப்தீன் றியாஸ் அவர்கள் தனது சட்டத்ததரணி தொழிலை சமூகத்துக்கு அர்ப்பணம் செய்து சிறந்த சமூக வல்லுனராகவும் திகழ கல்குடா சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம்.