ஜல்லிக்கட்டு தடை எதிர்ப்பு தொடர்கிறது



நேற்று ( செவ்வாய்க்கிழமை) காலை முதலில் சென்னை மெரினா கடற்கரையில் ஏரளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் , தற்போது சென்னை ராஜிவ் காந்தி சாலையில் தகவல் தொழில் நுட்ப துறை (ஐ.டி.) ஊழியர்களும்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு முழுவதும், சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் பெரும் திரளாகக் கூடி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில், பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) பகல் 1 மணி முதல் சென்னை டைடல் பூங்கா தொழில் நுட்ப பூங்கா மற்றும் ராமானுஜம் தொழில் நுட்ப பூங்கா ஆகியவற்றில் உள்ள தகவல் தொழில் நுட்ப துறை நிறுவன ஊழியர்களும் சாலையில் இறங்கி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
இதனால் ராஜீவ் காந்தி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஐடி நிறுவன ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில், 'பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்' என்றும் 'தமிழக முதல்வர் இது குறித்து உடனடியாக பேசசுவார்த்தையில் ஈடுபட வேண்டும்' என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.