பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்த கான்ஸ்டபிள்கள் கைது



கல்கிஸ்ஸை கடற்கரையில் வெளிநாட்டு பிரஜை ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்ய நாட்டு பெண்ணொருவர் நேற்று மாலை கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே குறித்த இருவரும் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களான பொலிஸ் கான்ஸ்டபிள்களை கைது செய்வதற்கு முயற்சித்த போது அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து தப்பி செல்ல அவர்கள் முயற்சித்துள்ளனர்.
அமைச்சரொருவரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள இரண்டு கான்ஸ்டபிள்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
27 மற்றும் 47 வயதான மிரிஹான மற்றும் கந்தளாய் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.