சுமந்திரனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதா?



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதிதிட்டமொன்று தீட்டப்பட்டிருந்ததாக, தி ஹிந்து ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. 

முன்னதாக சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அது குறித்து அவர் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், பிரதமர் செயலகத்தில் இருந்து, இம் மாத ஆரம்பத்தில் தகவல் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. 

இதனடிப்படையில் கிளிநொச்சியில் வைத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இதேவேளை இந்த விடயம் குறித்து சுமந்திரன் பதிலளிக்கையில், தனக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து அரசாங்கத்தால் சில தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

இதேவேளை, கடந்த 13ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்த சுமந்திரன் இறுதி நேரத்தில் தனது விஜயத்தை இரத்து செய்திருந்தார். 

இது தொடர்பில் சுமந்திரனிடம் ஹிந்து ஊடகம் கேள்வி எழுப்பிய போது, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நிகழ்வை இரத்து செய்யவில்லை. இதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன. எனினும் குறித்த தினத்தன்று என்னை கொலை செய்ய முயற்சித்த சந்தேகத்தின் பேரில் நால்வர் கைதுசெய்யப்பட்டதாக அறிந்தேன் எனக் கூறியுள்ளார்.