யாழ். குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்கான புதிய படகு சேவையான நெடுந்தாரகையின் முதற்பயணம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்கான படகு சேவைக்கு ‘நெடுந்தாரகை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குறிகட்டுவான் – இறங்குதுறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

