கல்முனை மாநகரில் ஐல்லிக்கட்டுக்கு ஆதரவாக



தமிழ் நாட்டு தமிழர்களின் பாரம்பரியங்களுக்கு மதிப்பளிப்பது மத்திய அரசின் தலையாய கடமையாகும் என்பதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கான ஆதரவினை இலங்கையில் உள்ள தமிழர்களும் ஆர்ப்பாட்டங்கள் மூலமும் பேரணிகள் மூலமும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். அதனொரு கட்டமாக வடகிழக்கு பிரதேசங்களில் அண்மைய நாட்களாக இளைஞர்கள் ஒன்று கூடி ஜல்லிக்காடடுக்கான தடையை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

 சனிக்கிழமை 21 ஆம்திகதி  அம்பாறை கல்முனை மாநகரில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியானது கல்முனை பஸ்தரிப்பு நிலையம் முன்பாக ஆரம்பித்து கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியூடாகச்சென்று கல்முனை அமானா வங்கிக்கு முன்னால் நிறைவடைந்தது.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் பல கிராமங்களிலும் இருந்து இளைஞர்கள் ஒன்றுகூடியிருந்தார்கள் அவர்களது கரங்களில் பதாதைகளை ஏந்தியவாறும்இ கோசங்களை எழுப்பியவாறும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.