பாலமுனை ஹிக்மா வித்தியாலயத்திற்கு
மாகண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களால் உதவி!!
(அய்ஷத்,பாயிஸ்-பாலமுனை)
பாலமுனை சின்னப்பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய அபிவிருத்தி தொடர்பில் அப்பாடசாலையின் அபிவிருத்தி சங்கமானது முன்னாள் அமைச்சர் மாகண சபை உறுப்பினர் Ms உதுமாலெவ்வை அவர்களை நேற்று (27) சந்தித்து கலந்துரையாடியது.
இதன் போது பாடசாலை சமூகத்தால் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
1. பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கு உதவுதல்.
2.ஒலிபெருக்கி வசதிகளை ஏற்படுத்தித் தரல்.
3 . பாடசாலைக்கு நுழைவாயில் அமைத்தல்.
இம் மூன்று கோரிக்கைகளையும் உடனடியாக ஏற்றுக் கொண்டு அதற்கான உதவியினை செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததுடன் முதல் இரண்டு கோரிக்கைகளையும் உடன் நிறைவேற்றியும் வைத்தார்.
கோரிக்கைகளையேற்று நிவர்த்தி செய்து தந்த மாகண சபை உறுப்பினர் அவர்களுக்கு பாடசாலை சமூகம், கிராம மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்.

