மட்டக்களப்பில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து பெய்யும் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 250 குடும்பங்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணம் தெரிவித்தார்.
ஆயித்தியமலை கிராமத்திலுள்ள மூன்று குளங்கள் உடைப்பெடுத்து வெள்ளம் ஊடுருவியமையால் கற்பானை, பள்ளச்சேனை, மணிபுரம், கற்புதானை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர்.
இவர்கள் மணிபுரம் மற்றும் கற்புதானை ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண உதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துரைரெட்ணம் கூறினார்.

