தென் கிழக்கு வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்று சுழற்சி மெல்ல வலுப்பெற்று தற்போது காற்றழுத்தமாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த காற்றழுத்தமானது அந்தமானுக்கு தெற்கு மற்றும் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்தம் நேற்று இரவு மேலும் வலுவடையத் தொடங்கி, இலங்கைக்கு கிழக்கு பகுதிக்கு நகர்ந்து வந்துள்ளது என்றும் இன்று அது வட மேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று அல்லது நாளை அந்த காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து தமிழக கடலோரப் பகுதிக்கு நகர்ந்து வரும். பின்னர் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது புயலாகவும் மாறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்படி காற்றழுத்தம் வலுவடையும் நிலையில் அது சென்னை மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.