ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி





(க.கிஷாந்தன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இரண்டு பதவி பூர்தியினை முன்னிட்டு அவருக்கும் நாட்டு மக்களுக்கும்  நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் பிரித் பிராயணம் ஒன்று 06.01.2017 அன்று இரவு அட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களான ட்பளியூ.ஜேரணசிங்க மற்றும் தர்மபிரிய அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பிரித் பாராயணத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இதன் மத்திய மாகாணத்தில் நிலவும் வறட்சியன காலநிலையினையடுத்து ஆறுகள் ஓடைகள் நீருற்றுக்ள நீர்த்தேக்கங்கள் ஆகிய வற்றிப் போய் உள்ளன எனவே மழை வேண்டியும் இப்பிராயணத்தில் விசேட பிரார்தனைகள் இடம்பெற்றதுடன் பிரித் பிராயணத்தில் வைத்து பிரார்தனை செய்யப்பட்ட புனித நீர் நீர்தேக்கங்களிலும் நீரேந்தும் பிரதேசங்களிலும் தெளிக்கப்பட்டன.

சுமார் 16 பௌத்த மதகுருக்கள் கலந்து கொண்ட இப்பிரித் பிராயத்தினை நடத்தி வைத்தனர் இந்நிகழ்வுக்கு அட்டன் டிக்கோயா நகரசபையின் பதில் செயலாயர் பிரியதர்ஷினி, உட்பட ஊழியர்கள் பிரதேச வாசிகள் கலந்து கொண்டனர்.