இருளில் மூழ்கிய இசங்கணிச் சீமை மையவாடிக்கு ஒளி



(SUHIB)
இசன்கனிச்சீமை மையவாடிக்கு புதிய மின் குமிழ் செற் அன்பளிப்பு
★★★★★★★★★★★

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இசன்கனிச்சீமை ஜும்ஆப் பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள மையவாடியினுள் முறையான விதத்தில் மின் குமிழ் இல்லாததினால் அப்பிரதேசம் இரவு நேரங்களில் இருளில் மூழ்கிக் காணப்படுகின்ற நிலையில் திடீரென ஏற்படுகின்ற ஜனாசாவைக் கூட நல்லடக்கம் செய்கின்ற போது பொது மக்கள் பலர் பெருத்த சிரமங்களினை எதிர் நோக்கி வருகின்றனர்.
அது விடயமாக பலரிடமும் இசன்கனிச்சீமை ஜும்ஆப் பள்ளி வாசலின் தலைவரான ஜனாப்.I.K.சுலைமா லெவ்வை என்பவர் தொடர்ச்சியான பல கோரிக்கையினை முன்வைத்த போதும், எவரும் அவ்விடயத்திற்காக உதவுவதற்கு முன்வரவில்லை.
அந்நிலையில் அக்கரைப்பற்று - 02 மத்திய வீதியைச் சேர்ந்த மர்ஹும் ஆதம் வாவா உமறு லெவ்வை என்பவரின் பேரில் அவரது பேரன் புதிய மின் குமிழ் செற்றினை இசன்கனிச்சீமை மையவாடியை வெளிச்ச மூட்டுவதற்காக இசன்கனிச்சீமை ஜும்ஆப் பள்ளி வாயலின் தலைவரான.ஜனாப்.I.K.சுலைமா லெவ்வை என்பவரிடம் நேரடியாக 2017.01.07 ஆந் திகதி சனிக் கிழமை காலை 10.30 மணியளவில் பள்ளி வாயலின் முன்றலில் வைத்து ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இசன்கனிச்சீமை மையவாடியை வெளிச்ச மூட்டுவதற்காக அக்கரைப்பற்றைச் சேர்ந்த Kanoos Electrical இன் உரிமையாளர் இரண்டு புதிய மின் குமிழ் செற்றினையும் வழங்குவதற்கு தாமாக முன்வந்துள்ளார்.
இசன்கனிச்சீமை பள்ளி வாயல், மையவாடிப் பிரதேசத்திற்கு Cable இலான புதிய 3 Phase Line மின் இணைப்பினை வழங்கியதற்காக அக்கரைப்பற்று பிரதேச மின்சார சபையின் மின் அத்தியட்சகரை நினைவு கூர்ந்து அன்னாருக்கு மேலான நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஏனெனில் ES உதவி செய்யாவிடின் எம்மால் எந்த புதிய மின் குமிழ் செற்களைப் பொருத்தி வெளிச்சத்தினைப் பெற்று இருக்க முடியாது எனவும் தெரிவித்துக் கொள்கின்றோம்.