மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமா அக்கரைப்பற்று மாநகர சபை ?



(Suhaib Umarlebbe)


கடந்த சில மாதங்களாக  அக்கரைப்பற்று 20, 21 ஆம் பிரிவுகளில் வைரஸ் மற்றும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று 21 RDS, அக்கரைப்பற்று மாநகர சபை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஒன்றிணைந்து அப்பிரதேசத்தில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்த புகை விசுறும் நடவடிக்கை உட்பட பல்வேறு வேலைத் திட்டங்களை மேற் கொண்டனர்.

இருந்த போதிலும் இப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது.  அதுவிடயமாக மாவடிச் சந்தியிலிருந்து தேசிய பாடசாலையின் வீதி வரையிலான வீதியின் இருபக்க வடிகான்களினுள் டெங்கு நுளம்பு பெருகி இருக்கலாமென அப்பிரதேச மக்கள் அச்சமடைகின்றனர்.

அதன் நிமிர்த்தம் மேற்குறிப்பிட்ட வடிகானினை துப்பரவு செய்து டெங்கு நோயிலிருந்து  மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமா அக்கரைப்பற்று மாநகர சபை  ?
து விடயமாக அக்கரைப்பற்று 21 RDS 2017.01.13 ஆந் திகதி வெள்ளிக் கிழமை எழுத்துருவிலான கோரிக்கையினை அக்கரைப்பற்று மாநகர ஆணையாளரிடம் கையளித்தனர்.