-மு.இராமசந்திரன்,எஸ்.கணேசன்-
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில், வானொன்று பெண்ணொருவரை இன்று மாலை 5:15 மணியளவில் மோதி தள்ளியதில் அப்பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செனன் தமிழ் வித்தியாலயத்துக்கு அருகிலேயே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. செனன் தோட்டத்தை சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரான எம்.கட்டாய் என்பவரே மரணமானார் செனன் தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது, நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துகொண்டிருந்த வானொன்றே அப்பெண்ணின் மீது மோதுண்டுள்ளது. காயமடைந்த அப்பெண், வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமாணதாக பொலிஸார் தெரிவித்தனர் சடலம், வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வான் சாரதி, ஹட்;டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.