அக்கரைப்பற்றில் மழை ஓய்ந்தும் வெள்ளம் வடியாத நிலைக்குக் காரணம்?




அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலய வீதி இதன் தெற்கு வீதி, பொலிஸ் நிலையத்தின் பின்புற வீதிகள் இன்றும் நீர் வடியாத நிலையில் காணப்படுகின்றது. 1500 இற்கும் மேற்பட்டோர் கற்கும் அஸ் ஸிராஜ் மகா வித்தியாலத்தில். சுமார் 300 இற்கும் குறைவான மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகமளித்துள்ளனர்., பெற்றேரா்கள் சிறார்களை தோளில் சுமந்து கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.  முறையாக வடிகான்கள் உரிய முறையில் நிர்மாணிக்கப்படாமையும், நிர்மாணிக்கப்பட்ட வடிகான்கள் மழைக்கு முன்னர் சுத்திகரிப்புச் செய்யாமையும் இதற்குக் காரணமாகும்.

அக்கரைப்பற்று மாநகரப் பிரதேசத்திலுள்ள அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி மற்றும் அம்பாரை வீதியும்,  வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) சொந்தமான வீதியாகும்.அவ்வீதியினையும் வடிகானினையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அக்கரைப்பற்றிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானதாகும்.

அது மாத்திரமல்ல நீரிணைப்புப் பெறுபவர்களுக்கு பணத்தினைப் பெற்று வீதியை அகழ்வதற்கான அனுமதியையும்,  பாதையோரங்களிலுள்ள விளம்பரதாரர்களின் விளம்பரங்களுக்கு பணத்தினை வசூலிக்கும் RDA அவ்வீதியோரங்களிலுள்ள வடிகான்களினை துப்பரவு செய்யாததன் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசங்ளில் நீர் வடிந்தோடுவதற்கு வழியின்றி மழை நீர் அக்கரைப்பற்றின் கடைகளுக்குள்ளும் நீர் நேற்றுப் புகுந்தள்ளது.