ஒலுவில் மீனவர்கள் மீட்பு



ஒலுவில் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமற்போயிருந்த மேலும் 4 மீனவர்கள் இன்று அதிகாலை மாலைத்தீவு கரையோர பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டதாக மாலைத்தீவுக்கு சென்றிருக்கும் பிரதி அமைச்சர் ஏ.எச்.எம்.ஹாரிஸ் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்தில் இருந்து இரண்டு படகுகளில் கடற்றொழிலுக்குச் சென்ற 6 மீனவர்கள் கரைக்கு திரும்பாததை அடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், இரண்டு மீனவர்கள் கடந்த 5 ஆம் திகதி மாலைத்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மீனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன.
மீனவர்களை மீட்கும் பணிகள் குறித்து ஆராய்வதற்காக பிரதி அமைச்சர் ஏ.எச்.எம்.ஹாரிஸ் மாலைத்தீவிற்கு சென்றுள்ளார்.